search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு கப்பல்"

    சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை முழுமையாக கைவிடவேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம் கோருகிறது வடகொரியா.

    இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். இருநாட்டு தலைவர்களின் இந்த 2-வது சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.

    இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையிலான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் 4-ந் தேதி குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய பல ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.

    வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை அதிரவைத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்தது.

    அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரவே வடகொரியா இந்த சோதனைகளை நடத்தியதாக பார்க்கப்படு கிறது.

    வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன்” என கூறினார்.

    இந்த நிலையில், சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. வடகொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டு செல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த போக்குவரத்து ஐ.நா.வின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    வைஸ் ஹானஸ்ட் என பெயர் கொண்ட இந்த கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் சிக்கியது. அதனை தொடர்ந்து, இந்த கப்பலை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கும், இந்த கப்பலை கைப்பற்றியதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி, முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மீனவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்பிடி படகு மீது மோதிய கப்பல் மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று கூறப்படுகிறது. நேற்று மங்களாபுரம் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் கப்பல் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கப்பல் மோதி படகு உடைந்த விபத்தில் பலியான 3 மீனவ குடும்பத்தினருக்கும் அரசு ரூ.10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் வேலை வழங்க வேண்டும். இதுபோல காயமடைந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். #ContainerShip #Fire #SailorsRescued
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது.  #ContainerShip #Fire #SailorsRescued #tamilnews

    ×